< Back
மாநில செய்திகள்
காளாம்பட்டியில்சிறப்பு கால்நடை சுகாதார  விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

காளாம்பட்டியில்சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
17 Oct 2023 6:45 PM GMT

காளாம்பட்டியில்சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள காளாம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமினை காளாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் அமுதாரவி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், உதவி இயக்குநர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினர். மேலும் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. நோய்வாய்ப்பட்ட ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கோட்ட உதவி இயக்குநர் விஜயா ஸ்ரீ, வானரமுட்டி கால்நடை உதவி மருத்துவர் கனகலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து சிறந்த கிடாரி கன்றுகளை வளர்க்கும் பயனாளிகளை பரிசுகளும், கேடயமும் வழங்கபட்டது. ஏற்பாடுகளை வானரமுட்டி கால்நடை உதவி மருத்துவர் கனகலட்சுமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்