< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்
|3 Oct 2024 2:48 PM IST
வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றால் போராட்டம் நடத்த தயார் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவாக விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயமாக அதனை திரும்ப பெற வேண்டும். நடிகர், நடிகைகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை போனால், அதை எதிர்ப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தயாராக உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். அவ்வாறு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.