< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
திண்டிவனத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்
|30 Sept 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் திண்டிவனம் கிருஷ்ணதாஸ், மரக்காணம் பாலமுருகன் (பொறுப்பு), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு வந்திருந்த 250 மாற்றுத்திறனாளிகள், இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன், 3 சக்கர வாகனம் வழங்க வேண்டும், அரசின் உதவித் தொகை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இதில் மாற்றுத்திறனாளிகள் 21-பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் வகையில், பெரியதச்சூர் பகுதியில் இடம் தேர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.