ஊட்டியில் இன்று முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கம்
|ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
ஊட்டி,
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டியை வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் செல்லும். முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் உள்ளன.
இதேபோல் ஊட்டி-கேத்தி இடையே 3 ஜாய் ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. இரண்டாவது சுற்று ஊட்டியில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கேத்தியை சென்றடையும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும்.மூன்றாம் சுற்று ஊட்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். 2 சிறப்பு மலை ரெயில்களும் இன்று , நாளை (சனிக்கிழமை) மற்றும் 25-ந் தேதி ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது.