< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
|23 Sept 2022 6:11 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் விஜயலட்சுமி துரை பாபு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.பி.ராஜன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கதிரவன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசியர் லலிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர், சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு 88 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள். விழாவில் வார்டு உறுப்பினர்கள், பாஸ்கர், குமரன், சுதாகர், சதீஷ், கல்விக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.