< Back
மாநில செய்திகள்
நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
27 Feb 2023 12:25 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் அரியலூர்- உடையார்பாளையத்தில் நாளை நடக்கிறது.

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த சிறப்பு குறைதீர் கூட்டமானது அரியலூர் வருவாய் கோட்டத்துக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாலை 4 மணியளவிலும், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காலை 11 மணியளவிலும் நடக்கிறது. அந்தந்த ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் ஆர்.டி.ஓ.விடம் நேரடியாக மனுக்களை வழங்கி பயனடையலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்