< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|14 Sept 2023 2:36 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 56 மாற்றுத்திறனாளிடமிருந்து வீட்டுமனை பட்டா, வங்கிக் கடன், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
ஒரு பயனாளிக்கு கல்வி உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 9 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு/இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு நிதி உதவி காசோலையாகவும் என மொத்தம் ரூ.3,21,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்துக் கொண்டனர்.