< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
|19 July 2023 12:14 AM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்கள் அளித்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.