நீலகிரி
பழங்குடியினருக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
|கோத்தகிரி அருகே பழங்குடியினருக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கோழிக்கரை கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தீபக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பழங்குடியின மக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, வனப்பகுதி மற்றும் ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்தினர். முகாமில் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.