< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
30 Dec 2022 1:03 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இலவச பஸ் பயண அட்டை, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, சிறு வணிக கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சில கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. மற்ற கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்