< Back
மாநில செய்திகள்
இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
22 Dec 2022 12:37 AM IST

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும் படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் நேரடியாக கோட்டாட்சியரிடம் மனுக்களை வழங்கி பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்