< Back
மாநில செய்திகள்
உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம்

தினத்தந்தி
|
2 Nov 2022 1:21 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் நொச்சிலி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிட்டியம்மாள் கிருஷ்ணம நாயுடு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வசந்தா சுப்பிரமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார். கொடிவலசா ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் தேசப்பன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் பூபதி நன்றி கூறினார்.

ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கு ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயணி கஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாரதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் சந்துரு நன்றி கூறினார்.

அதேபோல் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 39 கிராம ஊராட்சிகள் உள்ளது. ஆர்.கே, பேட்டை ஊராட்சி மன்றத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வேலு தலைமை தாங்கினார். துணை தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் அருள் நன்றி கூறினார்.

கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் நடந்த வார்டு சபை கூட்டம் நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.

இதே போல் நசரத்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாபொன் முருகன், அகரமேல் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், பாரிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

சோழவரம் ஒன்றியத்தில் வழுதிகைமேடு கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுடர்விழி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் சோழவரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருங்காவூர் ஊராட்சியில் தலைவர் சுவீட்டிகோபி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை தலைவர் சுகாசினி சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அபிநாத் அனைவரையும் வரவேற்றார். பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து நிலையில் அரசு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் சோழவரம் ஒன்றிய ஆணையாளர் குலசேகரன் பெருங்காவூர், சோழவரம், அலமாதி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் எம்டிஜி.கதிர்வேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொண்டக்கரை ஊராட்சியில் பொறுப்பு தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மகளிர் குழு உள்பட கலந்து கொண்டனர்.

அதேபோல் நாலூர் ஊராட்சியில் தலைவர் சுஜாதாரகு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் பாபு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சோனியா அனைவரும் வரவேற்றார். இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் கலந்து கொண்டு அரசு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மெதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உஷாசசிகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.

காரனோடை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கோமதி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி நிர்வாகம் தனது வார்டுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பாராபட்சம் காண்பிப்பதாக 11-வது வார்ட்டில் மட்டும் வார்டு உறுப்பினர் ஜோதி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தார்.

மேலும் செய்திகள்