< Back
மாநில செய்திகள்
உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
1 Nov 2022 11:23 PM IST

உள்ளாட்சி தினத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது

முசுவனூத்து ஊராட்சி

உள்ளாட்சி தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் முசுவனூத்து ஊராட்சி என்.ஆண்டிப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் பிரபாவதி ரவி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் அத்திப் முகமது வரவேற்றார்.

முல்லைப்பெரியாறு பிரதான கால்வாயில் நிலக்கோட்டை அருகே உள்ள கூட்டாத்து அய்யம்பாளையத்தில் இருந்து புதிதாக கிளை வாய்க்கால் வெட்டி முசுவனூத்து, கூவனூத்து, நக்கலூத்து, பிள்ளையார்நத்தம், சிலுக்குவார்பட்டி, எத்திலோடு ஊராட்சிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகம்பட்டி ஊராட்சி

வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு, தலைவர் ராஜம்மாள் தங்கவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தாரணி கார்த்திகேயன், ஊராட்சி செயலர் கணேசன், வேளாண்மை துறை அட்மா திட்ட அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

வி.புதுக்கோட்டை ஊராட்சி

வேடசந்தூர் அருகே உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி செயலர் லோகநாதன், துணைத்தலைவர் பாக்கியம் மகாமுனி, வேளாண் உதவி இயக்குனர் சின்னச்சாமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சுகந்தா, கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தட்டாரப்பட்டி ஊராட்சி

இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தீஸ்வரி ரத்தினம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் நாகலட்சுமி மருதபிள்ளை, 3-வது வார்டு கவுன்சிலர் வெக்காளிமுருகன், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோட்டூர் ஊராட்சி

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கீதா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பாண்டியராஜ் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சிலுக்குவார்பட்டியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

வேம்பார்பட்டி ஊராட்சி

வேம்பார்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கென்னடி தீர்மானங்களை வாசித்தார். இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜார்ஜ் ஆரோக்கியதாஸ், மரியாள், விஜயலட்சுமி, கால்நடை மருத்துவர் முருகானந்தம், தோட்டக்கலை துறை அலுவலர் சாவித்திரி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சுகுளிப்பட்டி ஊராட்சி

இதேபோல் அஞ்சுகுளிபட்டி ஊராட்சியில், தலைவர் தேவிராஜா சீனிவாசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர் ரேணுகாதேவி, ஊராட்சி செயலர் உமா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சாணார்பட்டி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி கவிதாதர்மராஜன் (திம்மணநல்லூர்), தமிழரசிகார்த்திகைசாமி (கோம்பைபட்டி), நிஷா (கணவாய்பட்டி), சலேத்மேரி (பஞ்சம்பட்டி), முத்துலட்சுமி (கூவனூத்து), விஜயா (கம்பிளியம்பட்டி), மணிமாறன் (செங்குறிச்சி), சின்னையா (வி.எஸ்.கோட்டை), நடராஜன் (ராகலாபுரம்), ஜெயலட்சுமி (வீரசின்னம்பட்டி), வெங்கடேசன் (சிலுவத்தூர்), பாலமுருகன் (வி.டி.பட்டி), ஜெர்மன்சாந்தி (மடூர்) ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

பொருளூர் ஊராட்சி

தொப்பம்பட்டி ஒன்றியம் பொருளூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி சக்திவேல், துணைத்தலைவர் வளர்மதி செல்லமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி

செட்டி நாயக்கன்பட்டி முதல் நிலை ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ராஜக்காபட்டி கோவில் திடலில் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் லதா தர்மராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வைத்தார். செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மாரிமுத்து செய்திருந்தார்.

மேலும் செய்திகள்