< Back
மாநில செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு திருவிழா....!
மாநில செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு திருவிழா....!

தினத்தந்தி
|
10 July 2022 8:28 AM IST

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு திருவிழா இன்று முதல் நடக்கிறது.

திருவட்டார்,

குமரி மாவட்டததில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இந்த கோவிலில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தினமும் நடைபெற்று வந்தது. கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பிறகு மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 72 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம் நேற்று காலையில் பூஜைகள் செய்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு திருவிழா இன்று முதல் நடைபெறுகிறது.

நேற்று மாலையில் தங்க கொடிமரத்திற்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுது. தொடர்ந்து தந்திரி அத்தியற மடம் கோகுல் தங்க கொடிமரத்திற்க்கு பூஜைகள் செய்து கொடி ஏற்றினார். கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு திருவிழா இன்று முதல் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. சிறப்பு திருவிழா என்பதால் பள்ளிவேட்டை மற்றும் ஆறாட்டு நிகழ்ச்சிகள் வழக்கமான இடங்களை தவிர்த்து வேறு பகுதியில் நடைபெறுகிறது. 13-ம் தேதி கோவிலின் பின் பகுதியில் உள்ள அரச மரத்தின் அருகில் பள்ளி வேட்டையும் 14-ம் தேதி காலையில் குலசேகர பெருமாள் கோவிலின் பின் பகுதியில் உள்ள பரளியாற்று கடலில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்