< Back
மாநில செய்திகள்
நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்புக்கட்டண ரெயில் - இன்று இயக்கப்படுகிறது
மதுரை
மாநில செய்திகள்

நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்புக்கட்டண ரெயில் - இன்று இயக்கப்படுகிறது

தினத்தந்தி
|
26 March 2023 2:34 AM IST

நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்புக்கட்டண ரெயில் இன்று இயக்கப்படுகிறது


தென்னக ரெயில்வே சார்பில், தென்மாவட்ட பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க வாரந்தோறும் மதுரை வழியாக சென்னைக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இதற்கிடையே, நெல்லையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை), மதுரை வழியாக தாம்பரம் வரை சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06040) நெல்லையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுநாள் அதிகாலை 6.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரெயிலில் 2 பார்சல் பெட்டிகளுடன் கூடிய பொதுப்பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

மேலும் செய்திகள்