< Back
மாநில செய்திகள்
காவல் நிலையங்களில் ரூ.10 கோடியில் சிறப்பு வசதிகள்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாநில செய்திகள்

காவல் நிலையங்களில் ரூ.10 கோடியில் சிறப்பு வசதிகள்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தினத்தந்தி
|
24 July 2023 6:36 PM IST

காவல் நிலையங்களில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முதல் அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

சென்னை,

காவல் நிலையங்களில் ரூ.10 கோடியில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முதல் அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதில் முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களில் தலா ரூ.4 லட்சத்தில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்