< Back
மாநில செய்திகள்
ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள்

தினத்தந்தி
|
28 Nov 2022 12:15 AM IST

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள் அதிகாரி தகவல்

விழுப்புரம்

விழுப்புரம் மின் வினியோக கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆகிய 3 நாட்களில் நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு ஆதார் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள், ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் www.tangedco.gov.in என்ற இணையதளம் வழியாகவும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்