காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
தேசிய குடற்புழு நீக்க நாள் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 81 ஆயிரம் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய 84 ஆயிரம் பெண்களுக்கு (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 'அல்பென்டசோல்' என்ற குடற்புழுநீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள மொத்த குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார துறை, குழந்தை வளர்ச்சி துறை, சமூக வளர்ச்சி துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை பணியாளர்கள் மூலம் அளிக்கப்பட உள்ளது.
விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் செப் 16-ந் தேதியன்று அல்பெண்டசோல் மாத்திரை அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.