< Back
மாநில செய்திகள்
வீரமகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வீரமகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
4 March 2023 1:53 AM IST

வீரமகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அம்மாப்பேட்டை மாரவாடி தெருவில் வீரமகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மன் புறப்பாட்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மாப்பேட்டை செங்குந்தர் தெருவில் அமைந்துள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவில் வளாகத்தில் வீரமகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நெய்வேத்தியம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அசோக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்