< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
|21 Jun 2022 8:58 PM IST
பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
சாத்தூர்
சாத்தூர் மாரியம்மன் கோவிலில் உள்ள பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிவன் கோவில் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலிலும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.