< Back
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
கலவை கமலக்கன்னி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

21 Oct 2023 12:02 AM IST
நவராத்திரியையொட்டி கலவை கமலக்கன்னி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கலவையில் உள்ள பிரசித்தி பெற்ற கமலக்கன்னி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. தினமும் கமலக்கன்னி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்று வரும் நிலையில் 5-ம் நாளான நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரித்து கமலக்கன்னி அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து பூ மாலை தங்க ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..
இதில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.