< Back
மாநில செய்திகள்
அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
10 Jun 2023 12:15 AM IST

அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் தனி சன்னதியில் அகிலாண்டேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பாகும். நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி வார வழிபாடு நடைபெற்றது. இதில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்