< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
சுதந்திர தினத்தையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
|14 Aug 2022 1:22 PM IST
சுதந்திர தினத்தையொட்டி திருத்தணியில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் பழமைவாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆன்மிக தலத்தில் தேசபக்தியை போற்றும் வகையில் இந்த திருக்கோவிலில் நேற்று வீர ஆஞ்சநேயருக்கு பாரத ஆஞ்சநேயர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பாரத ஆஞ்சநேயரை திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் ஆர்வமுடன் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். சாமிக்கு சிறப்பு அலங்காரத்தை அர்ச்சகர் ராஜா செய்திருந்தார்.