காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பிறபடுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோ கடன் திட்டம் போன்ற கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், மற்றும் கறவை மாடு கடன் திட்டம் போன்ற கடன் திட்டங்கள வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வட்டங்களில் பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ளது.
வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) தாசில்தார் அலுவலகம், காஞ்சீபுரம்
13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தாசில்தார் அலுவலகம், வாலாஜாபாத்
14-ந்தேதி (புதன்கிழமை) தாசில்தார் அலுவலகம், ஸ்ரீ்பெரும்புதூர்
15-ந்தேதி (வியாழக்கிழமை) தாசில்தார் அலுவலகம், குன்றத்தூர்
16-ந்தேதி (வெள்ளிகிழமை) தாசில்தார் அலுவலகம், உத்திரமேரூர்
எனவே, இந்த மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் (கிறிஸ்துவர், முஸ்லிம், சீக்கியர், புத்தம், பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் விண்ணப்பதாரரின் ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை, டிரைவர் லைலென்சு, (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச்சான்றிதழ் கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.