< Back
மாநில செய்திகள்
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
23 Sept 2023 1:00 AM IST

தர்மபுரி:

தடங்கத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி திறந்து வைத்தார்.

சிறப்பு நீதிமன்றம்

தர்மபுரி மாவட்டத்தில் போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகள், பாலியல் துன்புறுத்துதல் தொடர்பான வழக்குகள், மகிளா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன. அதிக அளவு வழக்குகள் உள்ள போக்ஸோ சட்ட வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன்பேரில் தர்மபுரி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க நல்லம்பள்ளி அருகே தடங்கத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக சையத் பாகத்துல்லாவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

திறப்பு விழா

இந்த நிலையில் தடங்கத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், குடும்பநல நீதிபதி, மோட்டர் வாகன விபத்து தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், தர்மபுரி வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், செயலாளர் கோவிந்தராஜு மற்றும் வக்கீல்கள் சங்க தலைவர்கள், செயலாளர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்