< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
10, 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவிக்கு சிறப்பு வகுப்பு
|24 May 2023 5:06 PM IST
கலவையில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவிக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவின்பேரில் சிறப்பு வகுப்பு நடப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் இந்தசிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுவருகிறது.
தேர்வில் தவறிய மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்தி பயிற்சி அளித்து வருகின்றனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மாணவிகளுக்கு காலை மற்றும் மாலையில் உணவு வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.