கரூர்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு
|10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது.
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் நடந்து முடிந்த 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. அதுபோல இந்த பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத மாணவிகள் சிலர் தேர்வு எழுதவில்லை. இந்தநிலையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவிகளுக்கும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் தேர்வு எழுதாத மாணவிகளும் துணைத் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதுவதற்காக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 23 -ந் தேதி முதல் இப்பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. துணை தேர்வு நடக்க உள்ள நாள் வரை இந்த பயிற்சி வகுப்புகள் இப்பள்ளியில் நடத்தப்பட உள்ளன. அதுபோல பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவிகளுக்கும் நாளை( திங்கட்கிழமை)முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பிற்கான நேரத்தை ஒதுக்கி மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தி சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.