திருவள்ளூர்
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
|ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
Special camps to make changes in ration cards at Tiruvallur districtதிருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை 21-ந்தேதி சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள் திருவள்ளுர்- சேலைகண்டிகை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, ஊத்துக்கோட்டை- ராமலிங்காபுரம் ரேஷன் கடை அருகில்,
பூந்தமல்லி- திருமணம் ஊராட்சி அலுவலகம், திருத்தணி- பழையனூர் வி.ஏ.ஓ. அலுவலகம், பள்ளிப்பட்டு- புண்ணியம் ரேஷன் கடை அருகில், பொன்னேரி- கொண்டக்கரை ஊராட்சி அலுவலகம், கும்மிடிப்பூண்டி- சாமிரெட்டி கண்டிகை ரேஷன் கடை அருகில், ஆவடி- கொசவன்பாளையம் வி.ஏ.ஓ. அலுவலகம், ஆர்.கே.பேட்டை- கதனநகரம் ரேஷன் கடை அருகே நடக்க உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.