பெரம்பலூர்
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள்
|மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் உப கோட்ட பிரிவு அலுவலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
லாடபுரம் கிராமத்திற்கு, அம்மாபாளையம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திலும், புது ஆத்தூருக்கு குரும்பலூரிலும், அடைக்கம்பட்டிக்கு நக்கசேலத்திலும், அனுக்கூருக்கு எசனையிலும், நெய்குப்பைக்கு வேப்பந்தட்டையிலும் சிறப்பு முகாம்கள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதேபோல் அன்னமங்கலத்திற்கு வேப்பந்தட்டையிலும், அரசலூருக்கு எசனையிலும், களரம்பட்டிக்கு அம்மாபாளையத்திலும், டி.களத்தூருக்கு நக்கசேலத்திலும், பாளையத்துக்கு குரும்பலூரிலும் சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
பாலையூருக்கு வேப்பந்தட்டையிலும், சோமண்டாபுதூருக்கு எசனையிலும், மங்கூனுக்கு அம்மாபாளையத்திலும், புது அம்மாபாளையத்துக்கு நக்கசேலத்திலும், மேலப்புலியூருக்கு குரும்பலூரிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந்தேதி நடக்கிறது. மேற்கண்ட முகாமில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.