< Back
மாநில செய்திகள்
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம்கள்

தினத்தந்தி
|
5 March 2023 12:47 AM IST

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் குறைவான பிரீமியம் வசூலிக்கப்பட்டு, அதிகமான போனஸ் தொகை வழங்கப்படுகிறது. கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் குறைவான பிரீமியம் செலுத்தி, நிறைவான முதிர்வு தொகை பெறலாம். இந்த திட்டத்தில் 18 முதல் 55 வயது வரை உள்ள கிராமப்புற மக்கள் அனைவரும் சேரலாம். மேற்கண்ட திட்டங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் பகுதிகளுக்கு உட்பட்ட அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம், என்று ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்