< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
|3 Sept 2022 2:33 PM IST
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1-8-2022 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அப்போது வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.