< Back
மாநில செய்திகள்
நரிக்குறவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்-திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் .
திருப்பூர்
மாநில செய்திகள்

நரிக்குறவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்-திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் .

தினத்தந்தி
|
12 Jun 2023 12:49 PM IST

பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

பல்லடம்,

பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் சான்று கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் அறிவொளி நகரில் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள், ஜாதி சான்று இல்லாததால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து வரும் 16-ந் தேதி அறிவொளி நகரில் சிறப்பு முகாம் நடத்தி நரிக்குறவர் இன மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்