திருவள்ளூர்
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாம் - இன்று நடக்கிறது
|ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்கண்ட கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
முகாம் நடத்தப்படும் இடங்கள் திருவள்ளூர் வட்டம் எறையா மங்களம் கிராமம், ரேஷன் கடை அருகில். ஊத்துக்கோட்டை வட்டம் சென்னங்காரணை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். பூந்தமல்லி வட்டம் படூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். திருத்தணி வட்டம் ஒரத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். பள்ளிப்பட்டு வட்டம் பார்த்தகுப்பம் ரேஷன் கடை அருகில். பொன்னேரி வட்டம் தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். கும்மிடிப்பூண்டி வட்டம் அயற்கண்டிகை கிராமம், ரேஷன் கடை அருகில். ஆவடி வட்டம் அன்னம்பேடு ரேஷன் கடை அருகில். ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மனேரி ரேஷன் கடை அருகில் நடைபெற உள்ளது. மேற்கண்ட இடங்களுக்கு சென்று பொதுமக்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.