< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
|25 Aug 2023 5:01 PM IST
பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் செப்டம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் வரும் செப்டம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.