திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்
|திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வருகின்ற 9-ந் தேதி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 9-ந் தேதி திருவள்ளூர் வட்டம் சிவன்வாயல் கிராமம் ரேஷன் கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் பனையஞ்சேரி கிராமம் ரேஷன் கடை அருகில், பூந்தமல்லி வட்டம் கம்மவார்கண்டிகை கிராமம் வி.ஏ.ஓ அலுவலகம், திருத்தணி வட்டம் சூரியநகரம் கிராமம் ரேஷன் கடை அருகில், பள்ளிப்பட்டு வட்டம் ஈதலகுப்பம் கிராமம் ரேஷன் கடை அருகில், பொன்னேரி வட்டம் புது எருமைவெட்டிபாளையம் ரேஷன் கடை அருகில், கும்மிடிப்பூண்டி வட்டம் ராஜாபாளையம் கிராமம் ரேஷன் கடை அருகில், ஆவடி வட்டம் திருநின்றவூர் அல்லது வி.ஏ.ஓ அலுவலகம், ஆர்.கே.பேட்டை வட்டம் ராகவநாயுடுகுப்பம் கிராமம் ரேஷன் கடை அருகில் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.