< Back
மாநில செய்திகள்
கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநில செய்திகள்

கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தினத்தந்தி
|
29 July 2023 6:21 PM IST

கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கோவை,

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட்1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை- திருவண்ணாமலை-சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், கிரிவலத்தை முன்னிட்டு கோவையில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் முதல் 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்