< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வார விடுமுறை, சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|6 July 2023 4:10 PM IST
நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.