சேலம்
ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
|ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர், பவானி, கந்தாசிரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை ஆகிய பகுதிகளுக்கும், நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை, அரப்பளீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர், கொடுமுடி, மோகனூர் பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
இதேபோல், திருச்செங்கோட்டில் இருந்து கொடுமுடி, பவானி பகுதிகளுக்கும், சங்ககிரியில் இருந்து பவானிக்கும், ராசிபுரத்தில் இருந்து காரவள்ளி, கொல்லிமலை பகுதிகளுக்கும், காரவள்ளியில் இருந்து அரப்பளீஸ்வரர் கோவிலுக்கும், எடப்பாடியில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் பகுதிகளுக்கும், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.