< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
|3 Dec 2022 2:02 AM IST
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் வருகிற 5-ந்தேதி இயக்கப்படுகிறது.
கார்த்திகை தீப திருவிழாைவயொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை புறப்படும் பஸ் மறுநாள் காலையில் திருவண்ணாமலைக்கு செல்கிறது. மீண்டும் 6-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்றிய பிறகு இரவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்களை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நெல்லை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் தெரிவித்து உள்ளார்.