< Back
மாநில செய்திகள்
தாம்பரத்தில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநில செய்திகள்

தாம்பரத்தில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தினத்தந்தி
|
15 Sept 2024 5:30 AM IST

அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று(15.09.2024) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.எனவே, இன்று அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்