< Back
மாநில செய்திகள்
நாளை காரைக்காலில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்து - புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு
மாநில செய்திகள்

நாளை காரைக்காலில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்து - புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Feb 2023 7:49 PM IST

நாளை காரைக்காலில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணணம் உள்ளனர்.

இந்த நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்காலில் இருந்து திருச்செந்தூருக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்