< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா
|8 July 2023 1:19 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார் கடன் கேட்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் பெரம்பலூர் தாலுகாவில் 16 விண்ணப்பங்களும், ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகாக்களில் தலா 12 விண்ணப்பங்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 9 விண்ணப்பங்கள் என மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.