< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை பெருவிழா சிறப்பு ஏற்பாடுகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை பெருவிழா சிறப்பு ஏற்பாடுகள்

தினத்தந்தி
|
8 Aug 2023 6:13 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை பெருவிழா வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

கோவிலுக்கு வருகை புரியும் குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் அவசர சிகிச்சைக்காக திருவள்ளூர் சுகாதாரத்துறை சார்பாக 10 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மலைக்கோயிலில் சரவணப்பொய்கை மற்றும் நல்லாங்குளம் ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்சுகளும், சரவணப்பொய்கை, மலைக்கோயில், நல்லாங்குளம், அரக்கோணம் சாலை மற்றும் சித்தூர் சாலை ஆகிய இடங்களில் 5 தீயணைப்பு வாகன ஊர்திகலும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

பக்தர்கள் திருத்தணியில் இருந்து மலைக் கோயிலுக்கு சென்று வருவதற்கு 5 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கவும், பிற ஊர்களில் இருந்து திருத்தணி சென்று வருவதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்