< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு விடுதிகளில் சிறப்பு சேர்க்கை
விழுப்புரம்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு விடுதிகளில் சிறப்பு சேர்க்கை

தினத்தந்தி
|
24 Nov 2022 12:15 AM IST

உலக உடற்திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு விடுதிகளில் சிறப்பு சேர்க்கை

விழுப்புரம்

மாவட்ட, மாநில, தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற பள்ளி மாணவ- மாணவிகள் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் உலக உடற்திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகள் ஆகியோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான சிறப்பு சேர்க்கை நடைபெற உள்ளது.

இவ்விடுதிகளில் விளையாட்டு பயிற்சி, உபகரணங்கள், தங்குமிட வசதி, சத்தான உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த மாணவ-மாணவிகள், www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் தேர்வுகள் அந்தந்த விளையாட்டு விடுதி அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதிக்குள் நடைபெறும். விடுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கான சேர்க்கை அந்தந்த மாவட்டங்களில் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெறும். பிற மாவட்ட விடுதிகளில் சேர விரும்புவோருக்கான கலந்தாய்வு இணையவழியில் அதே நாளில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் மையத்தை 9514000777 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்