< Back
மாநில செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வீரட்டானேஸ்வரர் கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
17 Jan 2023 12:15 AM IST

மாட்டு பொங்கலையொட்டி வீரட்டானேஸ்வரர் கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

திருக்கோவிலூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடு தோறும் பொங்கல் படையலிட்டு சிறப்பாக வழிபாடு செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாட்டுபொங்கலையொட்டி திருக்கோவிலூர் கீழையூர் சிவானந்த வல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்