< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
|28 Aug 2023 1:45 AM IST
சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில் 20-ம் ஆண்டு ஆவணி மூல பிட்டு திருவிழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அங்குள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர், வந்தியம்மை தாயார், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதி உலா, அருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வாணிய செட்டியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.