< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
|16 Jun 2023 12:05 AM IST
நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி கோட்டை பகுதியில் விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.