< Back
மாநில செய்திகள்
கந்தசஷ்டி 3-ம் நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

கந்தசஷ்டி 3-ம் நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
28 Oct 2022 12:10 AM IST

கந்தசஷ்டி 3-ம் நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி 3-ம் நாளை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்