< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
12 Feb 2023 12:03 AM IST

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை மாத கடைசி சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்