< Back
மாநில செய்திகள்
திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
9 May 2023 12:15 AM IST

திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி ராஜவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் விநாயகருக்கு மோதக கொழுக்கட்டை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஞானசக்தி விநாயகர் கோவில், ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்